search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியலில் என் வனவாசம்"

    அரசியலில் தனது வனவாச காலம் முடிந்துவிட்டதாக லட்சிய தி.மு.க. தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் கூறினார். #TRajendar
    சேலம்:

    சேலத்தில் லட்சிய தி.மு.க. தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் தற்போது ரொம்ப தெளிவாக இருக்கிறேன். அமைதியாக, அறிவுப்பூர்வமாக, ஆழமாக, ஆன்மிக ரீதியாக சிந்தித்து பதில் பேச முடிவு செய்து உள்ளேன்.

    நான் அரசியலில் இத்தனை காலம் போராடிவிட்டேன். 14 ஆண்டுகள் லட்சிய தி.மு.க.வை நடத்தினேன். இப்போது 15-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் 14 ஆண்டுகள் முடிந்து விட்ட காரணத்தால், என்னுடைய வனவாச காலம் முடிந்து விட்டது. எனவே எனக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று நினைக்கிறேன்.

    அரசியலிலும், சினிமாவிலும் எம்.ஜி.ஆர். பெரிய ஜாம்பவான். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஆட்சி காலத்தில் நான் அரசியலில் போராடிவிட்டேன். ஜாம்பவான்கள் காலத்திலேயே போராடிய பிறகு இப்போது உள்ள அரசியல் காலத்தில் போராட முடியாதா? நான் கடலிலேயே மீன் பிடித்து பார்த்து விட்டேன். குளத்தில் மீன் பிடிக்க முடியாதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    அரசியல் ரொம்ப கடினமானது. எந்த கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்வேன், இது தலைக்கனம் இல்லை.

    மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பொறுப்பு ஏற்றது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கருணாநிதி இருந்த காலத்தில் செயல் தலைவர் என்ற பெயரோடு இருந்தார். தற்போது செயலை எடுத்து தலைவராக இருக்கிறார். அவ்வளவுதான். அவருடைய செயல்பாடு இனிமேல் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    சிம்பு அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிம்புவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். எனவே தந்தை என்ற முறையில் வழக்கை சந்திப்பேன்.

    காவி மயம் குறித்து காலம் வரும் போது பதில் சொல்வேன். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொதுக் குழுவை கூட்டி முடிவு எடுப்போம். இனி வரும் காலங்களில் படத்தை குறைத்து விட்டு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TRajendar
    ×